உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடத்தல் செம்மண் லாரி பறிமுதல் 

 கடத்தல் செம்மண் லாரி பறிமுதல் 

கடலுார்: அனுமதியின்றி செம்மண் எடுத்துச்சென்ற லாரி மற்றும் டிரைவரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் அடுத்த எம்.புதுார் செல்வ முத்துமாரியம்மன் கோவில் அருகே நேற்று மதியம் செம்மண் ஏற்றி வந்த லாரியை, வி.ஏ.ஓ., அறிவழகன் மற்றும் வருவாய்த்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில், உரிய அனுமதியின்றி லாரியில், செம்மண் எடுத்துச்செல்வது தெரிந்தது. லாரி டிரைவர் கடலுார் ஒதியடிக்குப்பத்தை சேர்ந்த வெற்றிவேல்,30; என தெரிய வந்தது. இதையடுத்து, லாரி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ