உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற மாணவருக்கு எஸ்.பி., பாராட்டு

தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற மாணவருக்கு எஸ்.பி., பாராட்டு

கடலுார்: ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவரை, எஸ்.பி., பாராட்டினார். நெய்வேலியைச் சேர்ந்தவர் ரவி மகன் ஹரிஹரன்,18; சென்னையிலுள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். தடகள வீரரான இவர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழக அணி சார்பில் மிட்லே ரிலே 1000மீட்டர் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற மாணவர் ஹரிஹரனை, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார். கடலுார் மாவட்ட தடகள கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், பயிற்சியாளர் ஜேம்ஸ், இணைசெயலாளர் பாபு மற்றும் ஹரிஹரனின் தந்தை ரவி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்