சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு தீப்பொறி விழுந்து டீக்கடை சாம்பல்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இறுதி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு தீப்பொறி விழுந்து டீக்கடை எரிந்து சேதமானது. விருத்தாசலம் தாஸ்கண்ட் நகரில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை 2:45 மணியளவில் காட்டுக்கூடலுார் சாலையில் உள்ள திரு.வி.க., நகர் வழியாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது, ஊர்வலத்தில் ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்தபோது, அதிலிருந்து சிதறிய தீப்பொறிகள் அங்கிருந்த சாதிக்பாஷா என்பவரது டீக்கடை மீது விழுந்து தீப்பிடித்தது. இதில், டீக்கடை முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் எரிந்தது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.