உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள், புரட்டாசி 2ம் சனிக்கிழமையான நேற்று உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப் பதி திருமலை வெங்கடா ஜலபதி அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் அருள் பாலிக்கிறார். நேற்று புரட்டாசி 2ம் சனிக் கிழமையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ