கடலுார் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கடலுார் : கடலுார் முல்லை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். மாவட்ட கருவூல அலுவலர் சுஜாதா, கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கடலுார் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் விமல்ராஜ், விஜயசங்கர் மற்றும் பணியாளர்கள், நகர பிரமுகர்கள் பங்கேற்றனர்.கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் கூறுகையில், இங்கு, மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள் விற்பனை செய்யப்படுகிறது. கோவை கோரா காட்டன் புடவைகள், கூறைநாடு புடவைகள் போன்ற ரக காட்டன் புவைகள். வேட்டி, காட்டன் சட்டைகள், மாப்பிள்ளை செட் வேஷ்டி சட்டை, , படுக்கை விரிப்பு, தலையணை உறைகள் விற்பனை செய்யப்படுகிறது.தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வழங்குகிறது. அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதி உண்டு. தீபாவளியொட்டி கோ-ஆப்டெக்ஸ் கடலுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கடலுார் முல்லை கோ-ஆப்டெக்ஸ்சிற்கு ரூ.2 கோடி, சிதம்பரம் ரூ. 90 லட்சம், நெய்வேலி ரூ.65 லட்சம், பண்ருட்டி ரூ.25 லட்சம், விருத்தாசலம் ரூ.50 லட்சம் மற்றும் மங்கை விற்பனை நிலையத்திற்கு ரூ.35 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாதம் தவணை செலுத்தி. 12வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி. கூடுதல் சேமிப்புடன் பருத்தி, பட்டு ரக துணிகள் வாங்கலாம் என, தெரிவித்தார்.