துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிரந்தர மற்றும் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். துப்புரவு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவ அலுவலர் பிரதாப் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, மருந்து வழங்கினர்.முகாமில் நிரந்தர துாய்மை பணியாளர்கள், செப்டிக் டேங்க் பணியாளர்கள் உட்பட 257 பேர் பயனடைந்தனர்.முன்னதாக, நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு கையுறை, கம்பூட், மாஸ்க், ஒளிரும் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.