மேலும் செய்திகள்
கிருத்திகை வழிபாடு
28-Oct-2026
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
15-Nov-2026
விருத்தாசலம்: கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று (நவ.,23) மாலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதியில் புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து, உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடந்தது. பின்னர், சுவாமிக்கு அபிேஷக ஆராதனையுடன், சன்னதி முழுவதும் விளக்கேற்றப்பட்டது. இதேபோல், விருத்தாசலம் ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மங்கலம்பேட்டை ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவில்களில் சோமவார பூஜை நடந்தது.
28-Oct-2026
15-Nov-2026