உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் காங்.,மாநில தலைவர் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை

முன்னாள் காங்.,மாநில தலைவர் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை

சேத்தியாத்தோப்பு: காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி பிறந்தநாளையொட்டி நிர்வாகிகள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். காங்., கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அழகிரி பிறந்த நாளையொட்டி நிர்வாகிகள் சேத்தியாத்தோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன்கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து நலமுடன் பல ஆண்டுகள் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு, பூஜை நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இமயராஜ், மாவட்ட துணை தலைவர் சீத்தாராமன், வட்டார துணை தலைவர்கள் மணிவாசகன், ஆதிகேசவன், பழனிவேல், கோபிநாத், மாவட்ட செயலாளர் அசோகன், இணை செயலாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தனர். தீப்பாய்ந்த நாச்சியார் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை