தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
புவனகிரி : புவனகிரி வட்டார தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், கலைச்செல்வி, வளமைய மேற்பார்வையாளர் அருள் சங்கு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் வரவேற்றார். வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் நல்லமுத்து ஒருங்கிணைப்பாளராக பங்கேற்று பயிற்சியின் நோக்கம் குறித்து, ஆலோசனைகள் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், மதினா, கீதா, ஆசிரியை பவுலின்மேரி ஆகியோர் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.