மேலும் செய்திகள்
புத்தேரி கோவிலில் பிரதோஷ வழிபாடு
07-Sep-2025
திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி நேற்று காலை திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வரும், 11ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.
07-Sep-2025