உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் சித்திரை மாத பவுர்ணமியொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.தொழிலதிபர் வைரக்கண்ணு தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் சுமதி சுந்தர், பொருளாளர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தனர்.'குகையில் வளரும் கனலே' என்ற தலைப்பில் புதுச்சேரி விரிவுரையாளர் பூங்குழலி பெருமாள் பேசினார். இவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை