மேலும் செய்திகள்
கடலுாரில் கடல் சீற்றம்
23-Nov-2024
கடலுார் ; கடலுார் முதுநகர் மீன்மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதன் காரணமாக கடல் அலை சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இந்நிலையில் முதுநகர் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுமார் 150கிலோ எடையுள்ள பல்வேறு வகையான மீன்கள் கெட்டுப்போயிருப்பதை உறுதிசெய்த அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளை எச்சரிக்கை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
23-Nov-2024