கடலுார் அரசு கல்லுாரியில் விளையாட்டு விழா
கடலுார் : கடலுார் தேவனாம் பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் விளையாட்டு தின விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் சாந்தி வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். உடற்கல்வி இயக்குனர் குமணன் ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லுாரி துறைகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை புள்ளியியல் துறை வென்றது. துறைத் தலைவர் சுசிகணேசன், கவுரவ விரிவுரையாளர் விஜய் அமிர்தராஜ், வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம் வழங்கினர். ஒட்டுமொத்த தடகளப்போட்டியில் கணினி அறிவியல் துறை முதலிடம், புள்ளியியல் துறை இரண்டாம் இடம் பிடித்தன. தனிநபர் தடகளப்போட்டி சாம்பியன் பட்டத்தை பெண்கள் பிரிவில் கணினி அறிவியல் துறை மாணவி நேத்ராவதி, ஆண்கள் பிரிவில் வரலாற்று துறை மாணவர் ஜெயக்குமார் பெற்றனர்.பணி நிறைவு பெறும் வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி, பேராசிரியர்கள் தம்பிதுரை, கலைமதி, விலங்கியல் துறை பேராசிரியர்கள் ராஜ்குமார், மைக்கேல் பிரபு, ஆராய்ச்சி மற்றும் பொருளியல் துறை பேராசிரியர் உண்ணாமலை ஆகியோர் உடற்கல்வி துறைக்காக 80,000 ரூபாய் மதிப்பில் பளுதுாக்குதல் உபகரணம் வழங்கினர்.ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மாரிமுத்து செய்திருந்தார்.