உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் லதாஜெகஜீவன்ராம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் திருச்செல்வம் வரவேற்றார். இதில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளுதல், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் சிவக்குமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !