எஸ்.எஸ்.ஐ., வீட்டில் திருட்டு: கடலுாரில் துணிகரம்
கடலுார்: கடலுாரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் வெளி செம்மண்டலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். நேற்று முன்தினம் செந்தில்குமார் பணிக்கு சென்று, இரவு வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் இருந்த ஒருசில வெள்ளிப்பொருட்கள் மட்டும் திருடுபோன நிலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள் தப்பியது. தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ்காரர் வீட்டிலேயே திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.