உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கொள்ளைக்கு துணை போகும் எஸ்.எஸ்.ஐ.,

மணல் கொள்ளைக்கு துணை போகும் எஸ்.எஸ்.ஐ.,

கடலுார் எஸ்.பி., ராஜாராம் அதிரடி நடவடிக்கையால், மாவட்டத்தில் விருத்தாசலம் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாற்றில் கடந்த சில வாரங்களாக மணல் திருட்டு தடுக்கப்பட்டது. மணல் கொள்ளையர்களும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், மணலால் வருமானம் போச்சுனு எஸ்.எஸ்.ஐ., ஒருவர், தன்னோட நைட் டூட்டியில மாட்டுவண்டி மணல் கொள்ளையர்களுக்கு துாது அனுப்பி, தனிப்பிரிவு ஏட்டு உதவியுடன், மணல் கொள்ளையை துவக்கியுள்ளார். இது சக போலீசார் சிலருக்கே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மணல் திருட்டுக்கு துணைபோகும் சம்மந்தப்பட்ட எஸ்.எஸ்.ஐ., ஏற்கனவே வேலை பார்த்த ஸ்டேஷனில் மணல் கொள்ளைக்கு துணைபோனதாகக்கூறி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை