கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி பட்டமளிப்பு விழா
கடலுார் : கடலுார் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த 31வது பட்டமளிப்பு விழாவில், 1,400 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.விழாவிற்கு அண்ணமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம் ஆண்டறிக்கை வாசித்தார்.மூத்த துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சேவியர் மற்றும் துணை முதல்வர்கள், அனைத்துத்துறைதலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.