உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா வரவேற்றார். முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் முத்துபெருமாள் முகாமை துவக்கி வைத்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார். தாசில்தார்கள் அன்பழகன், தமிழ்ச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், குடிமை பொருள் (தனி) தாசில்தார் விக்டோரியா ராணி, மண்டல துணை தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் கங்காதரன், மின்வாரிய அலுவலர் மகேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வி.ஏ.ஓ.,க்கள் அலெக்சாண்டர், ராஜசேகர், வசந்தி, ஆனந்த், நேருதாஸ், சிவராமன், வனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.