மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
13-Sep-2025
நெல்லிக்குப்பம்; மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மருதுபாண்டி முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று 43 சேவைகளை வழங்கினர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சாதிகா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Sep-2025