உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்  

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்  

புவனகிரி : கீரப்பாளையம், ஆடூர் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். மத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். சிவக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபிதா ரவி வரவேற்றார். 15 துறைகளை சார்ந்த 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் கரிகாலன், ராம்குமார், பாலகுரு, சுபஸ்ரீ, மகேஷ்வரி, முருகேசன் செய்திருந்தனர். ஆடூர் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை