உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்தி ரன், பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பாஸ்கர், ஒன்றிய செயலாளர் மதியழகன், விவசாய அணி தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் வரவேற்றார். தா சில்தார் மகேஷ், பி.டி.ஓ., சக்தி, விவசாய அணி பாண்டுரங்கன், இலக்கிய அணி வேல்முருகன், கைத்தறி பிரிவு துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ