உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. துணை கலெக்டர் சண்முகவள்ளி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீராகோமதி , பாபு முன்னிலை வகித்தனர். சபா ராஜேந்திரன்எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு கலைஞர் வீடு, ரேஷன் கார்டுகள், இலவச மனைப்பட்டா, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். முகாமில், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், துணை தாசில்தார்கள் சிவக்குமார், கரிகாலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் வேணுகோபால், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், தேவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.