உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

கிள்ளை: கீழ் அனுவம்பட்டு ஊராட்சியில் நஞ்சைமகத்துவாழ்கை, தில்லைவிடங்கன், கோவிலம்பூண்டி, மடுவங்கரை, கீழ் அனுவம்பட்டு ஆகிய 5 ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பி.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஒ., அமுதா வரவேற்றார். முன்னாள் ஒன்றிய சேர்மன் கருணாநிதி, ஒன்றிய துணைச் செயலாளர்கள், சதா இளவரசு, செல்வகுமாரி முன்னிலை வகித்தனர். முகாமை, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில், 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். துணை பி.டி.ஓ., சுப்புலட்சுமி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் சிவலோகம், நிர்வாகிகள் நடராஜன், அரவிந்த், சுபாகர், சேர மன்னன், நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர், அனுசுயா விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை