மேலும் செய்திகள்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
07-Jul-2025
நெய்வேலி : நெய்வேலியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை சபா ராஜேந்திரன் எம்.எல்., பெற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் அடிப்படையில் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வடக்குத்து ஊராட்சி அலுவலகத்தில் நேற்று சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி துறைகளின் உதவி இயக்குநர் ஷபானா அஞ்சும் முன்னிலை வகித்தார். தாசில்தார் விஜய் ஆனந்த் வரவேற்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் சார்ந்த 46 சேவைகளுக்கான கோரிக்கைகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில்., தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வரும் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார். முகாமில் பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், மண்டல துணை பி.டி.ஓ., ராஜவேல், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவர் வீரராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, வடக்குத்து ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சடையப்பன்,மாவட்ட பிரதிநிதிகள் ராமவெங்கடேசன், ஏழுமலை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், மணிகண்டன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
07-Jul-2025