உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. செயல் அலுவலர் மருதுபாண்டி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வழங்கினர். முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்த மனுதாரருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து சான்று வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. தாசில்தார் சேகர், டாக்டர் மைதிலி, துணைத் தலைவர் சாதிகா உட்பட பலர் பங்கேற்றனர்.