உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி 31, 32, 33 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமை தாங்கினார். துணை சேர்மன் ராணி தண்டபாணி, மேலாளர் ஹரிகிருஷ்ணன், இன்ஜினியர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். நகராட்சி சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தொடர்ந்து, நடந்த மருத்துவ முகாமில், பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினார். முகாமில், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை குழுவினர் பொது, மகப்பேறு, நீரிழிவு உட்பட பல்வேறு குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து, மருந்துவர்கள், ஆலோசனை வழங்கினர்.