உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமை தி.மு.க., கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன், ஒன்றிய துணை செயலாளர் பாலு, மாவட்ட துணை செயலாளர் சுதாசம்பத், முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், பாண்டியன், செல்வக்குமார், செல்வராசு முன்னிலை வகித்தனர். முகாமில், பூந்தோட்டம், வாக்கூர், தேவன்குடி மூன்று ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று 16 துறை சார்ந்த அலுவலர் களிடம் மனுக்களை கொடுத்தனர்.