விருத்தாசலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விருத்தாசலம் : விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் பானுமதி, தாசில்தார் அரவிந்தன், தி.மு.க., நகர செயலர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். நகரமைப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார்.நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இதில், தி.மு.க., நகர துணை செயலர்கள் நம்பிராஜன், ராமு, அவை தலைவர் செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமரன், மற்றும் தி.மு.க., - காங்., கட்சி நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும், இந்த முகாமில், நகராட்சியில் உள்ள 1, 3, 4 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். துப்புறவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.