மேலும் செய்திகள்
போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு
10-Jan-2025
புவனகிரி; புவனகிரியில், ஸ்டேட் பாங்க் கிளை, முத்தாட்சிப்பிள்ளையார் கோவில் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.விழாவில் வங்கி கிளை மேலாளர் கலைமதி வரவேற்றார். சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் பர்மிந்தர் சிங் தலைமை தாங்கி, புதிய கிளையை திறந்து வைத்தார். பொது மேலாளர் பிரவஷ்குமார் சுபுதி, துணைப் பொது மேலாளர் கல்பனா, புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி, வாடிக்கையாளர் சேவையை துவக்கி வைத்தனர். விழாவில் புவனகிரி பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை உதவி மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
10-Jan-2025