உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

மாநில கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

கடலுார்: நெய்வேலியில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது.போட்டியை அ.தி.மு.க., மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன் துவக்கி வைத்தார். கடலுார், பெங்களூரு, கோவை, சென்னை, தஞ்சை, புதுச்சேரி, ஊட்டி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சிவமணி, வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.அ.தி.மு.க., முன்னாள் தொழிற்சங்க தலைவர் அபு, நகர அவைத் தலைவர் வெற்றிவேல், உணவு கழக உறுப்பினர் சாய் செந்தில், நெய்வேலி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ஆறுமுகம், செயலாளர் ரமணன், பொருளா ளர் சிதம்பரம், ஒருங்கிணப்பாளர் ஞானபிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை