மாநில அளவிலான கபடி போட்டி கடலுாரில் ஆக.2ல் துவக்கம்
கடலுார் : கடலுாரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி, ஆக.2ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.கடலுார் பரிதி பிரதர்ஸ் கபாடி கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 9ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் ஆக.2ம் தேதி துவங்குகிறது. ஆக.2 மற்றும் ஆக.2ம் தேதிகளில் நடக்கும் இந்த போட்டி கடலுார் மாவட்ட கபடி கழகத்தின் அனுமதி பெற்று நடக்கிறது. பங்கேற்க விரும்பும் அணிகள் ஆக.1ம் தேதிக்குள் 500ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பெண்கள் போட்டி ஆக.2ம் தேதி காலை 7மணிக்கும், ஆண்கள் போட்டி ஆக.3ம் தேதி காலை 7மணிக்கும் துவங்கும். போட்டிகள் அனைத்தும் செயற்கை ஆடுகளத்தில் நடக்கிறது. முதலில் வரும் 32அணிகள் மட்டுமே பதிவு செய்யப்படும். புதுவை மாநில அணிகளும் பங்கேற்கலாம் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.