உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாநில அளவிலான ஓவியபோட்டி : மாணவருக்கு பாராட்டு

 மாநில அளவிலான ஓவியபோட்டி : மாணவருக்கு பாராட்டு

சிதம்பரம்: தேசிய இளையோர் திருவிழாவிற்க்கான ஓவியப் போட்டியில் மாநில அள வில் மூன்றாம் இடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்கும் வகையில், 29 வது தேசிய இளையோர் திருவிழா நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங் கேற்றனர். அதில் விழுப்புரம் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர் ஹரிஷ், ஓவியப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதித்தார் . மாணவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடைநம்பி வாழ்த்தினார். அப்போது நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ