மேலும் செய்திகள்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
15-Jul-2025
கடலுார்: கடலுாரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் 173 பயனாளிகளுக்கு 58.78 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஜோ அருண் வழங்கினார். கடலுார் கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையத் தலைவர் ஜோ அருண் தலைமை தாங்கினார். சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறுபான்மையினர் நல ஆணைய துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ் (எ) இறையன்பன் குத்துாஸ் மற்றும் உறுப்பினர்கள் ஹாமில்டன் வில்சன், ஸ்வர்னராஜ், நஜ்முதீன், பிரவின்குமார் தாட்வியா, ராஜேந்திர பிரசாத், ரமீட் கபூர், முகம்மது ரபி, வசந்த் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தொன்மையான தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் கோபாலபுரம் புனித அந்தோணியார் கிறிஸ்துவ தேவாலயம் புனரமைத்தல் பணிக்கு 33.25 லட்ச ரூபாய் 2ம் கட்ட தவணைத்தொகையாகவும், கடலுார் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் சிறுதொழில் தொடங்க 42 பயனாளிகளுக்கு 4.20லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான உதவித்தொகைகளையும், கடலுார் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் சிறுதொழில் தொடங்க 130 பயனாளிகளுக்கு 21.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உதவித்தொகைகளையும் என மொத்தம் 173 பயனாளிகளுக்கு 58.78லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஜோ அருண் வழங்கினார். இக்கூட்டத்தில் எஸ்.பி.,ஜெயகுமார், மாநகராட்சி ஆணையாளர் அனு, கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், பயிற்சி கலெக்டர் மாலதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Jul-2025