உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில குண்டு எறிதல் போட்டி மாற்றுத்திறன் மாணவர் சாதனை

மாநில குண்டு எறிதல் போட்டி மாற்றுத்திறன் மாணவர் சாதனை

விருத்தாசலம்: முதல்வர் கோப்பைக்கான குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவர் கவிநிலவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 37 வகையான மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டியில், 12 மாற்றுத்திறன் மாணவர்கள் வெற்றி பெற்று, 1 லட்சத்து 7 ஆயிரம் பரிசு பெற்றனர்.அதில், பிளஸ் 1 மாணவர் கவிநிலவன், குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து, 75 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, தலைமை ஆசிரியர் வினோத்குமார், சிறப்பு பயிற்றுனர் இளவரசன் ஆகியோர் பாராட்டினர்.தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மாற்றுத்திறன் மாணவரை பாராட்டி, ஊக்கப்பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை