உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி வைத்த சிலை பறிமுதல்

அனுமதியின்றி வைத்த சிலை பறிமுதல்

புதுச்சத்திரம்: கடலுார் அடுத்த ஆண்டார்முள்ளிப் பள்ளம் செல்லியம்மன் கோவில் வளாகத்தில் அம்பேத்கர் சிலை இருந்தது. இது கடந்த 2011 ம் ஆண்டு வீசிய 'தானே' புயலின் போது, உடைந்து சேதமடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய இடத்திலேயே, அப்பகுதி மக்கள் 6 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலையை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி.,ரகுபதி, டி.எஸ்.பி., விஜயகுமார், தாசில்தார் மகேஷ், துணை தாசில்தார் துரைராஜ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிலை அனுமதியின்றி வைத்ததாக கூறி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை