சிறந்த கல்வி சேவையில் எஸ்.டி.ஈடன் பள்ளி முதன்மை
கல்வி ஒழுக்கத்தில் சிறந்தது எஸ்.டி.ஈடன் பள்ளி என, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தாளாளர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் கூறினர். இதுகுறித்து அவர்கள், மேலும் கூறியதாவது: வடலுார் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் இயங்கி வரும் எஸ்.டி.ஈடன் கல்விக்குழுமம் பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்தற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கவுரவிக்கப்பட்டனர். இக்கல்வியாண்டில் 91 மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையால் நடத்தப்பட்ட குறுவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக இப்பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், கேடயம் வழங்கி பாராட்டினார். 2024-2025ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இலவசமாக பரதம், யோகா, கராத்தே, சிலம்பம் மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை கலைநிகழ்ச்சி, ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. பள்ளியிலே 'நீட்' தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் மாணவர்கள் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தனர். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றி கூறிய வள்ளலார் வாழ்ந்த வடலுாரில் இப்படியும் ஒரு சாதனை பள்ளியாக இருப்பது பெருமையே.