உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி; விருத்தாசலத்தில் பரபரப்பு

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி; விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு பள்ளி மாணவிகளுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.அதில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாய் திட்டியதால் மனமுடைந்து, சக மாணவிகளிடம் இருந்து 30 இரும்புச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அதேபோல், பிளஸ் 1 மாணவி ஒருவர் சத்து குறைபாடு உள்ளதாக கூறி 7 மாத்திரைகளையும், மற்றொரு பிளஸ் 1 மாணவி ஒரு மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்தனர். மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை கண்காணிக்குமா?

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கும் மாத்திரைகளை மாணவிகள் உடன் சாப்பிடுவதை சுகாதார துறையினர் உறுதிப்படுத்துவதில்லை. பெயரளவில் மாத்திரைகளை மட்டும் மாணவிகளிடம் கொடுத்துவிட்டு செல்வதால், இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடக்கிறது. எனவே, இனிவரும் காலங்களிலாவது, மாத்திரை கொடுத்ததும், அதனை மாணவிகள் உடன் உட்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை