மாணவர்கள் பயிற்சி
கடலுார்: பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேப்பூர் அடுத்த மங்களூரில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை பார்வையிட்டனர். பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், வேப்பூர் அடுத்த மங்களூரில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மங்களூரில் உள்ள நடமாடும் மணி பரிசோதனை ஆய்வகத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். தலைமை மண் பரிசோதனை அலுவலர் கலையரசன், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மண்ணில் உள்ள சத்துக்களை கண்டறியும் முறைகள் பற்றியும், மண் பரிசோதனை செய்வதால் ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும் என்பதையும் விளக்கி கூறப்பட்டது.