உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வட்டார அளவில் செஸ் போட்டி மாணவ, மாணவிகள் ஏமாற்றம்

வட்டார அளவில் செஸ் போட்டி மாணவ, மாணவிகள் ஏமாற்றம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் அறிவை வளர்ப்போம் ஆற்றலை பெருவோம் என்ற தலைப்பில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது.தலைமை ஆசிரியர்கள் செல்வி, வினோத்குமார் துவக்கி வைத்தனர். அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், இன்பேண்ட் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 40 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பேட்டிகள் நடத்தப்பட்டது.உடற்கல்வி இயக்குனர் லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, பிரகாசம் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர். மாணவிகள் மகாலட்சுமி முதலிடம், அனிதா இரண்டாமிடம், புகழரசி மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.மூளைத்திறனை மேம்படுத்தும் செஸ் போட்டிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒரே அறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை தரையில் அமரச்செய்து, கடமைக்கு போட்டிகள் நடந்தன. கூச்சல் குழப்பத்திற்கு இடையே தயாராக சென்றிருந்த வீரர்களும் தோல்வியை தழுவினர்.வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகள் ஏதுமின்றி, மேஜை நாற்காலிகள் ஏற்பாடு செய்து, அமைதியான சூழலில் செஸ் போட்டியை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி