உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போலீசாருடன் மாணவர்கள் கலந்துரையாடல்

 போலீசாருடன் மாணவர்கள் கலந்துரையாடல்

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து கற்றறிந்தனர். காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பள்ளி நிறுவனர் முத்துக்குமரன், தாளாளர் பரணிதரன் தலைமையில், காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அதில், காவலர்களின் பணிகள், காவல் நிலையத்தில் நடைபெறும் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பது, காவலர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி பயன்பாடுகள் குறித்த தகவல்கள், பொது மக்களின் பிரச்னைகளை எவ்வாறு அணுக வேண்டும் மற்றும் தனி மனிதனின் ஒழுக்கநிலை குறித்து, இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், சப் இன்ஸ்பெக்டர் சையது அப்சல் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்து கலந்துரையாடினர். மேலும், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உற்சாகப்படுத்தினர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்தி சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !