உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய ரோப் ஸ்கிப்பிங் போட்டி விருதை மாணவர்கள் பங்கேற்பு

தேசிய ரோப் ஸ்கிப்பிங் போட்டி விருதை மாணவர்கள் பங்கேற்பு

கடலுார்: ஹரியானா மாநிலத்தில் நடந்த 25வது தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில், விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.ஹரியானா மாநிலம், பன்ச்குலா தாவ் தேவிலால் அரங்கத்தில், பைத்தின் கவுன்சிலர் ஆப் இந்தியா சார்பில் 25வது தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்க பொதுச் செயலாளர் கமலேஸ்வரன் தலைமையில், விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் குமரன் மற்றும் ஹரிஹரன் தமிழகம் சார்பில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர். இந்திய ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு பொதுசெயலாளர் நிர்தேஷ் சர்ஷா, சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். போட்டியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய பயிற்சியாளர் கமலேஸ்வரன் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ