உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திறக்கப்படாத பள்ளி கழிவறை மாணவ, மாணவிகள் அவதி

திறக்கப்படாத பள்ளி கழிவறை மாணவ, மாணவிகள் அவதி

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாமல் இருந்தது. இதற்காக நகராட்சி மூலம் ரூ.13 லட்சம் செலவில் புதியதாக கழிவறைகள் கட்டப்பட்டது. அந்த பணி முடிந்து பல மாதமாகியும் திறக்கபடாமல் உள்ளது.ஆசிரியர்களும் பெற்றோர்களும் நகராட்சி கமிஷ்னரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.கமிஷனர் கிருஷ்ணராஜன் வடலுார் நகராட்சிக்கும் பொறுப்பு வகிப்பதால் இங்கு பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தால் கழிவறை திறக்கபடாததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர்.மாணவர்கள் நலன் கருதி கழிவறையை உடனடியாக திறக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ