மாநில மல்யுத்த போட்டி 11 பதக்கங்கள் குவித்த மாணவர்கள்
கடலுார்: நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான மல்யுத்த போட்டியில், கடலுார் மாணவர்கள் 11 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு மாநில அளவிலான எட்டாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி, சமீபத்தில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. அதில் 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கடலுார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். அதில் மனோஜ்குமார், துருவ சித்தன், ஹாரிஸ், உதேஸ் முத்துராம், ஜித்தேஷ், கிஷோர், யுகேஷ் கோவிந்த், கபிலன், பிருத்விராஜ் ஆகிய 9 மாணவர்கள் தங்கப்பதக்கத்தையும், ரோவன்ராஜ் வெள்ளிப்பதக்கம், கார்த்திக் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் பதக்கங்களை குவித்த மாணவர்களை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர் மெய்ஞானமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.