உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு சப் கலெக்டர் பாராட்டு

மாணவர்களுக்கு சப் கலெக்டர் பாராட்டு

சிதம்பரம்; தனித்திறன் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சப் கலெக்டர் ராஷ்மிராணி கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். சிதம்பரம் மாணவர்கள் திறன் வளர்ப்பு குழு சார்பில், சிதம்பரம் நந்தனார் ஆண்கள், நந்தனார் பெண்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த, தலா 10 பேர் வீதம், தனித்திறன் பெற்ற மாணவ, மாணவிகள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தனித்திறன் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் ஏழிசைவல்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் லதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார். சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மிராணி மாணவ, மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.ஆசிரியர்கள் கலாராணி, சுபா, மீனாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை