உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்

அரசு பஸ்சில் திடீர் புகை: பயணிகள் ஓட்டம்

கடலுார்; சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லும் அரசு பஸ் (டி.என்.32 என்.4624), நேற்று காலை 11.30 மணியளவில் கடலுார் நேதாஜி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்பக்கத்திலிருந்து புகை வந்ததால் பயணிகள் பஸ்சை நிறுத்தச்சொல்லி இறங்கினர்.பின் டிரைவர், கண்டக்டர் பஸ்சை ஆய்வு செய்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் ஒன்று பஞ்சராகி, அதன் ரிம்மிலிருந்து புகை கிளம்பியது தெரிந்தது. இதையடுத்து வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை