நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் முக்கிய பட்ட கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் முக்கிய பட்ட கரும்பு அரவை துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். இணை உபத்தலைவர் பாண்டியன்,கரும்பு பிரிவு முதுநிலை இணை உபத்தலைவர் சங்கரலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.இது குறித்து முதுநிலை கிளைத்தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: கரும்புக்கு மட்டுமே நிலையான விலை உள்ளது. ஆட்கள் தேவையை குறைக்க 4.5 அடி இடைவெளியில் கரும்பு பயிரிட்டால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்த முடியும்.சொட்டுநீர் முறையை கடைபிடித்தால் தண்ணீர்,உரம் தேவை குறையும்.மகசூல் அதிகரிக்கும்.எனவே விவசாயிகள் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.நடப்பு பருவத்தில் 21 கரும்பு வெட்டும் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். ஆலை மூலம் அறிவித்துள்ள ஊக்கதொகை திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன் பெறலாமென கூறினார். விழா ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் தேவராஜன், சிவராமன் செய்திருந்தனர்.