உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழாவில், மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தில்லை காளி தடகளப் பயிற்சி கிளப் சார்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், பள்ளி விடுமுறையையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு 25 நாட்கள் இலவச தடகள பயிற்சி நடந்து முடிந்து, அதன் நிறைவு விழா நடந்தது.முகாம் நிறைவு விழாவிற்கு தலைமை பயிற்சியாளர் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் காளிமுத்து தலைமை தாங்கி பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். மேலும், மாவர்களின் திறன் அறிந்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.முதுகலை உடற்கல்வி துறை மாணவர்கள் மனோஜ், சரவணன் பயிற்சி வழங்கினர். தலைவர் கண்ணப்பன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ராஜசேகர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ