உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பசுமை போர்வை திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

பசுமை போர்வை திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

கடலுார், : கடலுார் வட்டார விவசாயிகளுக்கு, பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.காரைக்காடு வனத்துறை நாற்றாங்கால் பண்ணையில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். இதில், பதிவு செய்த விவசாயிகளுக்கு மகோகனி, தேக்கு, செம்மரம் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 60 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து விவசாயிகள் மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம் என, அறிவுறுத்தினர்.அப்போது, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண் அலுவலர் பொன்னிவளவன், உதவி வேளாண் அலுவலர்கள் சங்கரதாஸ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ