மேலும் செய்திகள்
நல்லாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
23-Apr-2025
கவுன்சிலர் இல்ல திருமண விழா
06-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் திருமண விழா நடந்தது.பா.ம.க., மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மைத்துனர், விருத்தாசலம் அடுத்த பரவலுார் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-கவிதா தம்பதி மகன், டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் அருண்குமார், ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்-செல்வி தம்பதி மகள் காவியா திருமணம் கடந்த 25ம் தேதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்தது.திருமண வரவேற்பு விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள, மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி இந்துமதி சுரேஷ், கார்த்திகேயன்- வளர்மதி தம்பதி வரவேற்றனர்.டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
23-Apr-2025
06-Apr-2025