உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் விடுதியில் தாசில்தார் ஆய்வு

மாணவர் விடுதியில் தாசில்தார் ஆய்வு

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே அரசு மாணவர் விடுதியை தாசில்தார் ஆய்வு செய்தார். சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்படுகிறது. இதில், பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், அ.களத்தூர் உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்தவர் 40 அரசு பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியை, வேப்பூர் தாசில்தார் ராமர் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அதில், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், பதிவேடுகள், உணவுகளின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, விடுதி காப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !